headlines

img

கவுரவர்களின் ஆட்சி!

பிரதமர் நரேந்திர மோடியை பாஜகவினர் விஸ்வகுரு என்று புகழ்பாடிக் கொண்டிருக்கின்ற னர். ஆனால் அவரோ மவுன குருவாகவே இருந்து கொண்டிருக்கிறார்.மனதின் குரலிலும் வெளி நாட்டு வரவேற்பு நிகழ்வுகளிலும் மட்டுமே பேசு கிறார் மோடி.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின் போதும் எதுவும் பேசவில்லை. மணிப்பூர் பற்றி எரிந்து 75 நாட்களுக்கு மேலான போதும் மவுன மாகவே இருந்தார். அமைதி ஏற்படுத்த நடவ டிக்கை எதுவும் எடுக்கவுமில்லை. ஆனால் இப்போது மவுனம் கலைத்திருக்கிறார். 

நாட்டுக்கு அவமானமாக இருக்கிறது மணிப் பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது என்கிறார். ஆனால் மணிப்பூர் முதல்வருக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அனைத்து முதல்வர்களும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப் படுத்த வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் அவரது “பேட்டி பச்சாவோ” (பெண்களை பாதுகாப்போம்) முழக்கத்தின் லட்சணம்.

இதுவும் கூட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமை மீறும் செயல் என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிய அவகாசம் தருகிறோம். இல்லையெனில் நாங்கள் தலையிடு வோம் என்று கண்டித்ததனால்தான். அத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 28 அன்று தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அதுவும் நாடாளுமன்றம் கூடுவதும் மோடியை வாய்திறக்க வைத்திருக்கிறது.

மணிப்பூர் குக்கி பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்றதும் பட்டப்பக லில் பொதுவில் பாலியல் வன்கொடுமை செய்த தும் அதைத் தடுக்க முயற்சித்த இளம் பெண்ணின் சகோதரனை கொலை செய்ததும் மே 4 அன்று நடந்ததாக செய்தி ஏடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் 18 அன்று தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் மேகசந்திர சிங் கூறியிருக்கிறார். 

அந்த மாநிலத்தின் முதல்வருடன் பேசியதாக வும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதாகவும் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறு கிறார். முதல்வர் பைரேன் சிங்கோ குற்றவாளிக ளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறுகிறார். இதுதான் பாஜக அரசின் நடவடிக்கை எடுக்கும் லட்சணம். இவர்கள் வழக்கு நடத்தும் வழக்கம் நாட்டுக்குத் தெரியாதா?

பாஜகவின் வெறுப்பு அரசியலும் பிரிவினை அரசியலும் தான் குக்கி பழங்குடியின மக்கள் மீது, மெய்டெய் மக்கள் குழுவினர் இத்தகைய தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்பதும் அத னால் பாஜக மாநில அரசு கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதும் ஒன்றிய அரசும் கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதும் தெளிவானது. மொத்தத்தில் நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டுள் ளது. ஏனெனில் ஆட்சியில் இருப்பது துரியோத னாதியர்களின் கவுரவர்கள் கூட்டம். இது கவுரவமான ஆட்சியல்ல!