headlines

img

தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. நியூஸ்கிளிக் இணைய குழு மத்தின் நிறுவனரும், இடதுசாரி சிந்தனையா ளருமான பிரபீர் புர்காயஸ்தாவின் கைது சட்டவிரோதம் என்று அறிவித்து அவரை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  

கடந்த ஆண்டு அக்டோபர் 3 அன்று, பயங்கர வாத எதிர்ப்பு சட்டமான, சட்டவிரோத நடவ டிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டார். அவரு டைய ஊடக நிறுவனமான நியூஸ்கிளிக், சீன ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக நிதியைப் பெற்றிருக்கிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அடிப்படையாக வைத்து அவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்ச் மாதத்தில் 8 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. ஆனால் அவரைக் கைது செய்ததில் இருந்து, காவல்துறை தங்கள் அதி காரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்திருக்கி றது என்று பிரபீர் புர்காயஸ்தா தரப்பில் அவருக் காக வாதாடிய கபில் சிபல் உச்சநீதிமன்றம் முன் பாகத் தெளிவாக எடுத்து வைத்தார். குறிப்பாக, அவரைக் கைது செய்து நீதியரசர் முன்பாக நிறுத்துகையில் அவரது வழக்கறிஞர் இல்லை. அதுபற்றி, பிரபீர் புர்காயஸ்தா கேட்டபோது, வாட்ஸ் அப்பில் வழக்கறிஞருக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

புர்காயஸ்தாவின் கைதை சட்டவிரோதம் என்று அறிவித்து விட்டால், காவல்துறை தனது பணியை எப்போதுமே செய்ய முடியாமல் போய் விடும் என்ற அரசு வழக்கறிஞரின் கருத்தை நீதி யரசர் பி.ஆர்.கவாய் திட்டவட்டமாக நிராகரித்தி ருக்கிறார். சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் செயல் படுவதற்கு அனைத்து அனுமதியும் உண்டு என்று கூறிவிட்டார். இதே வழக்கில் மீண்டும் வேறு பிரிவுகளில் அவரைக் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டிருக்கிறது. அதனால் பிணைப் பத்திரங்கள் குறித்த உத்தரவையும் உச்சநீதி மன்றம் அளிக்கும் என்றனர். 

தங்களுக்கு எதிராகச் செயல்படும் ஊடக நிறுவனங்களை விலைக்கு வாங்குவது அல்லது அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கி விடுவது என்று மோடி தலைமையி லான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இத னால் பல செய்தி நிறுவனங்கள் பாஜகவுக்கு கைத்தடிகளாக மாறிவிட்டன. அதுபோல்  நியூஸ்கிளிக் நிறுவனத்தையும் முடக்கி விட லாம் என்று தப்புக்கணக்கு போட்டனர். நெருக்கடி தந்த நிலையிலும் தனது பணியைத் தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை யால், நியூஸ்கிளிக் முன்னை விட அதிகத் துடிப்போடு தனது பணியைத் தொடரும் என்ப தும் நிச்சயம்.

 

;