headlines

img

நிர்வாக அலட்சியம்

கடந்த வாரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் நடைபெற்ற தீவிபத்தில் 33 பேர் உயிரிழந்ததும் தில்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் 7 பேர் பலியான தும் வேதனையான நிகழ்வுகள். அரசு நிர்வா கத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவங் கள் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற் படுத்தியுள்ளது. நாட்டில் தீ தடுப்பு நடவடிக்கை கள் எந்தளவுக்கு பலவீனமாக இருக்கின்றன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் தீ விபத்துக்கள் அவ்வப்போது நேர்ந்தாலும் பெரும்பாலான விபத்துக்களை தவிர்த்திருக்கமுடியும்.  ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் தீ தடுப்பு  சாதனங்கள்  வைக்கப்பட வில்லை. தீ விபத்து ஏற்பட்டால் மக்களை உடன டியாக  வெளியேற்றவும் அவரசகால வழிகள் ஏற்படுத்தப்படவில்லை. விளையாட்டு மையத்திற்கு முறையான ஒப்புதலும் பெற வில்லை. இதனை  கவனித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய பாஜக தலைமையிலான ராஜ்கோட் மாநகராட்சி நிர்வாகம் அதைச் செய்யவில்லை. 

இந்த தீ விபத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட குஜராத் உயர்நீதி மன்றம், மாநில அரசு மற்றும் ராஜ்கோட்  மாநகராட்சி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளது. “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு இது” என்றும், “எந்தவித ஒப்புதலும் இல்லாமல் இவ்வ ளவு பெரிய மையம் இயங்கிவருவது நிர்வா கத்தின் கண்களுக்கு எப்படி தெரியாமல் போனது” என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. 

தில்லி தனியார் மருத்துவமனையிலும் பச்சிளம் குழந்தைகளுக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது அந்த மருத்துவமனையில் அள வுக்கு அதிகமாக வைக்கப்பட்டிருந்த 27 ஆக்சி ஜன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியுள்ளன.  

அலட்சியமாக நடந்து  கொண்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கி றார்கள். இங்கும் அவசரகாலத்தில் வெளியேற வழிகள் ஏற்படுத்தப்படவில்லை. தீத் தடுப்பு  சாதனங்கள் இருந்தும் அவை செயல்பாட்டில் இல்லை. மேலும் தீ எச்சரிக்கை ஒலிப்பான்க ளும் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரைத் தெளிக்கும் ஏற்பாடுகளும் இயங்கவில்லை. தலைநகர் தில்லியில் மட்டுமல்ல நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது. எனவே மாநில அரசுகளும் உள் ளாட்சி நிர்வாகங்களும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட்டால் மனிதத் தவறுகளால் ஏற்படும் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். 

;