பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளால் கையால் மலம் அள்ளுவது அதிகரித்திருக்கிறது என தெரியவந்திருக்கிறது. மேலும் துப்புரவுத் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச்சூழலை எதிர்கொள்ளும் ஒன்பது நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக வங்கி மற்றும் வாட்டர் எய்ட் ஆகியவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1993 ல் மனித கழிவுகளை கையால் அள்ளு வதை சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால் 2019 ஜூலையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடாளுமன்றத் திற்கு அளித்துள்ள பதிலில், 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் 54 ஆயிரத்து 130 பேர் இன்றும் கையால் மலம் அள்ளும் பணியை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறைகளில் 38 விழுக்காடு அப்படியே கழிவு கள் தேங்கும் வகையில் செப்டிக்தொட்டிகள் இருக்கின்றன. 20 விழுக்காடு ஒற்றைக் குழியுடன் செப்டிக் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கிறது. இதன் கார ணமாக இந்த கழிவறைகளில் உள்ள கழிவுகளை மனிதர்களே கையால் அகற்ற வேண்டிய கட்டா யம் ஏற்பட்டிருக்கிறது. இரட்டை குழிகளை கொண்டு முறையாக கட்டப்பட்டிருந்தால் இந்த சிக்கல் இல்லை என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழக்கின்றனர். துப்புரவுத் தொழிலா ளர்களின் ஆயுட்காலம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக 50 வயதிற்கு மேல் வாழ்வோ ரின் எண்ணிக்கை இந்த காலத்தில் கணிசமாக குறைந்து வருகிறது என்கிறது கல்வி மற்றும் தொடர்பு மைய ஆய்வறிக்கை. சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகள் அமோனியா, கார்பன் மோனாக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் அதிகம் இருக்கும் இட மாகும். இதில் பணிபுரியும் போது பல்வேறு தொற்று நோய்களுக்கும், உயிர்க்கொல்லி நோய்களுக்கும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளாகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நான்கு அல்லது 5 பேர் கையால் கழிவுகளை அள்ளும் போது தங்கள் உயிர்களை இழக்கின்றனர். எந்த நாட்டிலும் மக்களை நச்சுவாயு கொண்ட கழிவறைக்குள் அனுப்பி இறக்கச் செய்வதில்லை என்று 18 செப் டம்பர் 2019ல் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடு மையாகச் சாடியிருக்கிறது.
ஆனாலும் மத்திய மோடி அரசு அதைப்பற்றி கவலை கொள்வதாக தெரியவில்லை. காரணம் கையால் மனிதக்கழிவுகளை அகற்றுவோரின் மறுவாழ்விற்காக இருக்கும் எஸ்ஆர்எம்எஸ் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை கடுமை யாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது. 2013-14ல் இத் திட்டத்திற்கு ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டது. 2018-19 நிதியாண்டில் 93 சதவிகிதத்தை குறைத்து வெறும் ரூ.5 கோடி மட்டுமே மோடி அரசு ஒதுக்கியிருக்கி றது. இந்த பாகுபாடு குலத்தொழிலை உறுதி படுத்தும் மநுதர்மத்தின் மறுவடிவமாகவே இருக்கிறது. இது தேசிய அவமானம்.