தமிழகத்தில் ஒருமணி நேரத்திற்கு 9 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். போக்சோ சட்டம் வந்த பின்னரும் பெண்கள், சிறுமி கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.
தில்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூர பாலியல் வன்கொடுமையால் கொல்லப் பட்ட சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இதையடுத்து பொது இடங்க ளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியை அறிவித்தது. அதில் ஒன்றுதான் ‘நிர்பயா நிதி’. இந்த நிதியை பெண்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தைச் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் தற்போதுள்ள ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கியது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, சமூக நலத் துறை, போக்குவரத்துத்துறை இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
ஆனால் கடந்த கால அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை முறையாகச் செலவிடப்படவில்லை. ஒன்றிய அரசு ஒதுக்கிய 461 கோடி ரூபாய் நிர்பயா நிதியில் பத்து விழுக்காட்டை மட்டுமே கடைசி நான்கு ஆண்டுக்காலத்தில் அதிமுக அரசு செல வழித்தது. இதை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசே ஒப்புக்கொண்டது.
பெண்களைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் காகித வடிவி லேயே உள்ளன. பெண்களுக்கு எதிராகக் குற்றங் கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் கண் காணிப்பு கேமிராக்களை பொருத்துதல், பொது போக்குவரத்து வாகனங்களில் அவசர பொத்தான், இருட்டான இடங்களில் போதிய தெருவிளக்கு களைப் பொருத்துதல், போதிய கழிப்பிட வசதி, உதவி மையங்கள், அனைத்து காவல்நிலையங்க ளிலும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்டவை அமலாகவில்லை.
சென்னை நீலாங்கரை அருகே பெண் மருத்து வர் ஒருவர் ஓடும் காரில் நிகழ இருந்த பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பித்தார். இதன் பின் னரும் நகரில் இயங்கும் ஓலா, உபேர் போன்ற வாடகை கார்கள் மற்றும் பேருந்துகளில் அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்படவில்லை. இதே போல் பெண்களுக்கு எதிரான சைபர்குற்றங்களை தடுக்க தடய அறிவியல் துறையில் நவீன மென் பொருட்கள் தேவைப்படுகின்றன.
இவற்றைக் கணக்கில் கொண்டு திமுக அரசு நிர்பயா நிதியை முறையாகப் பயன்படுத்தி பெண் கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களைக் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாலின சமத்துவம் குறித்து அரசு அதிகாரிகள் காவல்துறையினருக்கு பாடம் நடத்தினால் போதாது இளைஞர்களிடமும் அதுகுறித்த சரியான பார்வையை உருவாக்குதல் அவசியம்.