games

img

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து  

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து வியாழனன்று பாசெல் நகரில் நடந்த சுவிஸ்  ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்றுகள் முடிவடைந்து அதில் வெற்றி பெற்றவர்கள் நேற்று இரண்டாம் சுற்றில் பங்கேற்றனர்.  

நேற்று நடந்த ஆட்டத்தில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான விக்டர் ஆக்செல்சன் கடைசி நிமிடங்களில் ஆட்டத்தை விட்டு விலகியதால் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் போட்டியின்றி காலிறுதிக்கு முன்னேறினார்.  

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 21-13, 21-19 என்ற செட் கணக்கில் பின்லாந்து வீரரான கலே கோல்ஜோனெனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பிரனாய் சகநாட்டு வீரரான காஷ்யப்புடன் மோத இருக்கிறார்.  

அதனைதொடர்ந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, துருக்கி வீராங்கனை நெஸ்லிஹன் இகிட் உடன் மோதினார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் நெஸ்லிஹன்னை வீழ்த்தி பிவி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.  

பிவி சிந்து அடுத்ததாக, டென்மார்க்கின் தரவரிசையில்லா லைன் கிறிஸ்டோபர்சன் அல்லது ஐந்தாம் நிலை வீராங்கனையான கனடாவின் மிச்செல் லியை எதிர்கொள்கிறார்.

இதற்கிடையில் உலகின் 25 ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் உலகின் 64 ஆம் நிலை வீராங்கனையான மலேசியாவின் கிசோனா செல்வதுரையிடம் 21-17,13-21,13-21 என்ற செட் கணக்கில் 55 நிமிடங்களில் தோல்வியடைந்து வெளியேறினார். முதல் கேமில் சாய்னா நேவால் வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டில் சரியாக ஆடாமல் தோல்வி அடைந்தார்.  

லக்ஷ்யா சென் இல்லாத நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், 73 நிமிடம் நீடித்த போட்டியில் 13-21, 23-25, 21-11 என்ற செட் கணக்கில் உலகின் 60 ஆம் நிலை வீரரான பிரான்சின் கிறிஸ்டோ போபோவை வீழ்த்தினார்.

;