games

img

குண்டு வெடிப்புகளுக்கிடையே 45 பதக்கங்களை வென்று நாடு திரும்பும் இந்திய வீரர்கள்

குண்டு வெடிப்புகளுக்கிடையேயும் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் 45 பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர் இந்திய வீரர்கள். 

உகாண்டாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன்-2021 போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 56 வீரர்கள் கலந்து கொண்டு 45 பதக்கங்கள் வென்றுள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து 9 வீரர்கள் பங்கேற்று 12 பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த ருத்திக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதுபோல் தமிழ்நாடு வீரர்கள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், உகாண்டாவில் பதக்கங்களைப் பெற்று விட்டு வீரர், வீராங்கனைகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை, மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து வீரர் பத்ரி நாராயணன் கூறுகையில், உகாண்டாவில் நடந்த பாரா பேட்மிண்டன் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டு 12 பதக்கங்களைப் பெற்றுத் திரும்பி உள்ளோம். உகாண்டா சென்றிருந்த போது தங்கி இருந்த விடுதி அருகே பயிற்சிக்குச் சென்ற போது அதிபயங்கரமாக 2 குண்டுகள் வெடித்தது. அப்போது, உகாண்டா தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் எங்களைக் கவனித்துக் கொண்டனர். குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பயிற்சி செய்தோம். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக 12 பதக்கங்கள் வென்றுள்ளோம். இந்தியாவிற்கு 45 பதக்கங்கள் கிடைத்துள்ளது.  யூத் பாரா ஏசியன் போட்டிகளில் சந்தியா, ருத்திக், கரன் ஆகிய தேர்வாகியுள்ளனர் எனத் தெரிவித்தார். 

;