games

img

சீனியர் மாநில கேரம் போட்டி ,திருப்பூர் மாவட்டம் சாம்பியன்

தமிழ்நாடு கேரம் அசோசியேசனும், அரியலூர் மாவட்ட கேரம் அசோசி யேசனும் இணைந்து நடத்திய 61-வது தமிழ்நாடு மாநில சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் தொடர் அரியலூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நடைபெற்றது. ஆடவர், மகளிர் என தமிழகத்தில் இருந்து மொத்தம் 25 மாவட்ட அணிகள் பங்கேற்றன.  இந்த தொடரில் திருப்பூர் மாவட்டம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மாநில அளவில் முதன்முறையாக சாம்பி யன் பட்டம் வென்ற திருப்பூர் மாவட்ட அணியினர் 25-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் பெடரேஷன் கோப்பையில் கலந்து கொள்கின்றனர்.  இந்த தொடரில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகாராஷ்டி ரா மாநிலம் மும்பையில் நடைபெறும் தேசிய கேரம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.