24-வது ஒலிம்பிக் தொடர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. பொதுவாக குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ரஷ்யா, அமெரிக்கா, நார்வே, கனடா ஆகிய நாடுகள் தான் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தும். மற்ற நாடுகள் பின்வரிசையில் பதக்கத்திற்காக போராடும். இதே நிகழ்வு தான் கடந்த ஒலிம்பிக் தொடரில் (சோச்சி - 2014 ரஷ்யா) நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. 4-வது நாளான திங்க ளன்று ஜெயன்ட் ஸ்லாலாம் ரன் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனை சாரா ஹெக்டர் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வீடன் நாடு தொடக்கத்திலேயே 3 தங்கம் வென்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒலிம்பிக் தொடரில் 2 தங்கம் (மொத்தம் 15 பதக்கங்கள்) வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்தது ஸ்வீடன்.
திணறும் அமெரிக்கா
2 விதமான (கோடை, குளிர்) ஒலிம்பிக் தொடரிலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா தற்போது நடை பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அந்நாட்டு வீரர்களின் சொதப்பலான செயல்பாடால் இதுவரை தங்கப்பதக்கம் வெல்லவில்லை. 3 வெள்ளிப்பதக்கத்தை வென்று 14-வது இடத்தில் உள்ளது.
பதக்கப்பட்டியல்
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
ஸ்வீடன் 3 0 0 3
ரஷ்யா 2 2 2 6
நெதர்லாந்து 2 1 1 4
நார்வே 2 0 1 3
கனடா 1 1 2 4