games

img

பாராலிம்பிக் தொடர்.... தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்....

டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரின் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் (டி - 63) இந்தியாவின் தங்கவேலு மாரியப்பன் 1.86 மீ உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீ உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் அமெரிக்க வீரர் சாம் (1.88 மீ) தங்கப்பதக்கம் வென்றார். 

பாராலிம்பிக் தொடர்களில் மாரியப்பனுக்கு இது 2-வது பதக்கமாகும். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ தொடரிலும் தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்பில் தான் மாரியப்பன் ஜப்பான் சென்றார். ஆனால் கடும் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் தொடக்க நிகழ்வில் பங்கேற்மால் செவ்வாயன்று நடைபெற்ற போட்டியில் மட்டும் களமிறங்கினார்.மாரியப்பன் தங்கப்பதக்கம் வெல்லாததற்கு காய்ச்சலும் முக்கிய காரணம் தான்.

                       ************

துப்பாக்கிச்சூடு: சிங்ராஜுக்கு வெண்கலம்

ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்சிங்ராஜ் அதானா 216.8 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இந்த பிரிவில் சீன வீரர்கள் யங் சவோ (237.9 மீ), ஹுவாங் சிங்க் (237.5 மீ) ஆகியோர்கள் முதல் இரண்டு  இடங்களை பிடித்து தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். 

செவ்வாயன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், மொத்த பதக்க எண்ணிக்கை 10-ஆக (2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம்) உயர்ந்துள்ளது. பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா வெல்லும் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னர் 1984 (நியூயார்க்,ஸ்டாக்), 2016 (ரியோ) ஆகிய பாராலிம்பிக் தொடர்களில் தலா 4 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மாலை 6 மணி நிலவரம்) 

;