games

img

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு வெண்கலம்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் நடப்பாண்டிற்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவு இறுதி  சுற்றில் இந்தியாவின் வருண் தோமர் 250.6 புள்ளிகளுடன் வெண் கலப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்லோவோக்கியாவின் டுஜின்ஸ்கி (254.2 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், இத்தாலியின் பாவ்லோ மோன்னா (252.8 புள்ளிகள்) வெளிப்பதக்கமும் வென்றனர்.