24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரின் 12-வது நாளான புதனன்று சுவீடன் மகளிர் பையத்லான் பிரிவில் தங்கமும், மகளிர் கிராஸ் கவுன்ட்ரி ஸ்கியிங் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆடவர் பிரீஸ்டைல் பிரிவில் வெண்கலப்பதக்கம் என மூன்று பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் டாப் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆடவர் பிரீஸ்டைல் பிரிவில் அமெரிக்கா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. (மாலை 4 மணி நிலவரம்)
பதக்கப்பட்டியல்
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
நார்வே 13 7 8 28
ஜெர்மனி 10 6 4 20
அமெரிக்கா 8 7 4 19
ஆஸ்திரியா 6 7 4 17
ஸ்வீடன் 6 4 4 14