இறுதி ஆட்டம் பாரம்பரியமிக்க சென்டர் கோர்ட்டில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம். ஹாட் ஸ்டார் கணக்கு (சந்தா இருந்தால் மட்டுமே) இருந்தால் நேரடி ஒளிபரப்பில் காணலாம்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பைக்கு ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) - எலினா ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் டென்னிஸ் உலகில் ஒன்ஸ் ஜபீர் கூட சற்று பழக்கப்பட்ட பெயர் தான். ஆனால் எலினா ரைபகினா பெயர் தற்போது கேள்விப்படும் படி உள்ளது. 2020-ஆம் ஆண்டிலிருந்து தான் டென்னிஸ் விளையாட்டில் வளர்ந்து வரும் எலினா திடீரென விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி டென்னிஸ் உலகை அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளார். எலினா - ஜபீர் இருவரும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் முதன்முறையாக இறுதிப் ப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், சனியன்று நடைபெறும் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.