games

அனுபவம் இல்லாமல் களிமண் தரையில் சாதித்த ரூத்

நார்வே நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான காஸ்பர் ரூத்துக்கு (23) சர்வதேச டென்னிஸ் உலகில் பெரியளவு அனுபவம் கிடையாது. குறிப்பாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் அதிகபட்சமாக 4-வது சுற்று வரை மட்டுமே (ஆஸ்திரேலிய ஓபன் - 2021) முன்னேறியுள்ளார். இதுதான் ரூத்தின் அதிகபட்ச முன்னேற்றம்.  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நடப்பு ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அதிரடியாக செயல்பட்டு இறுதி சுற்றுக்கு முன்னேறி டென்னிஸ் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளார். முக்கியமாக களிமண் தரையில் அதிரடியாக விளையாட போதுமான அனுபவம் வேண்டும், ஆனால் ரூத் எவ்வித அனுபவம் இல்லாமல் அசத்தியது தான் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஆகும்.

பரிசுத்தொகை  (ஒற்றையர் பிரிவு)
முதலிடம் : ரூ.18 கோடி
இரண்டாமிடம் : ரூ.9 கோடி

இரட்டையர் பிரிவு
முதலிடம் : ரூ.4 கோடி
இரண்டாமிடம் : ரூ.2 கோடி