games

img

விளையாட்டு...

இணையத்தில் வைரலாகும் முகமது அலி... மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்...
அன்று அமெரிக்க முகமது அலி... 
இன்று இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள்...

அன்று அமெரிக்க முகமது அலி கறுப்பின வேறுபாட்டிற்காக செய்த செயலை, இன்று பாலியல் குற்றவாளியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நியாயம் கேட்டு இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் செய்ய முயன்றுள்ளனர்.

அன்று...

அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்ப வான் முகமது அலி 1960-இல் இத்தாலி ஒலிம்பிக் தொடரில்  தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் பதக்கம் வென்றதால் கறுப் பின வேறுபாடு மாறும் என்ற எண் ணத்தில் ஒரு உண வகத்திற்கு சென்றார். ஆனால் உண வகத்தில் முகமது அலிக்கு உணவு மறுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவமானப்படுத்தி அனுப்பியுள்ளது உணவாக நிர்வாகம். இதனை எதிர்த்த முகமது அலி ஒலிம்பிக் தொடரில் வென்ற தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசினார். 

இன்று... 

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது  நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் தங்களது பதக்கங்களை உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் கனத்த இதயத்து டன் வீச முயன்றனர். நல்வாய்ப்பாக விவசாய சங்க தலைவர், “நரேஷ் திகாயத் எங்களுக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுங்கள், நாங்கள் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறோம்” என்று கூறி பதக்கத்தை வெள்ளை துணியில் வாங்கி கொண்டு சென்றார்.  அன்று அமெரிக்க முகமது அலி கறுப்பின வேறுபாட்டிற்காக செய்த செயலை, இன்று பாலியல் குற்றவாளியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை  என்று நியாயம் கேட்டு இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் செய்ய முயன்றுள்ள னர். 5 நாட்களில்  பிரிஜ் பூஷண் மீது எவ்வித  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டாயம் முகமது அலியின் இடத்தில் இந்திய மல்யுத்த நட்சத்திரங்களும் உயர்ந்து நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ரஷ்யா மீதான தடையை நீக்குவதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரைன் போரால் ரஷ்யா - பெலாரஸ் நாட்டிற்கு பொருளாதார தடைகளுடன் விளை யாட்டு உலகிலும் தடைகளை எதிர் கொண்டது. தற்போதைய நிலையில் கால்பந்து தவிர பெரும்பாலான போட்டிகளில் ரஷ்யா - பெலாரஸ் நாட்டிற் கான தடை நீக்கப்பட்டு வரும் நிலை யில், சர்வதேச பேட்மிண்டன் சம்மேளன மும் ரஷ்யா - பெலாரஸ் நாடு மீதான தடையை நீக்குவதாக அறிவித்துள் ளது. சர்வதேச பேட்மிண்டன் சம்மேள னம் ரஷ்யா - பெலாரஸ் நாட்டிற்கு கடந்த ஆண்டு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொடி, நாடுகளின் பெயர்களில் பங்கேற்கக் கூடாது ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாடுகளின் வீரர் - வீராங்கனைகள் டென்னிஸ் விளை யாட்டைப் போன்று நாடுகளின் பெயர் மற்றும் கொடிகளுடன் பங்கேற்க கூடாது. பாஸ்போர்ட் அனுமதி மூலம் தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்களாக போட்டியிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.

பாரிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : காயம் காரணமாக மோனோபில்ஸ் விலகல்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 92-வது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.  ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் உள்ளூர் வீரரும் (பிரான்ஸ்), ஸ்டைலிஷ் நாயகனுமான மோனோபில்ஸ் விலகியதால் அவரை எதிர்த்து போட்டியிட இருந்த நார்வே நாட்டின் ரூனே அதிர்ஷ்ட வாய்ப்புடன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.



 

;