games

img

செஸ் தரவரிசை மீண்டும் டாப் 10-இல் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே நாட்டில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் புதனன்று நடைபெற்ற 7-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை (நார்வே) வீழ்த்தினார். இதன்மூலம் உலக செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் டாப் 10-இல் (9-வது இடம்)  நுழைந்துள்ளார். 52 வயதாகும் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.