games

img

விளையாட்டு...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு தங்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புதனன்று ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது.  இந்த தொடரின் தொடக்க நாளிலேயே இந்தியா தங்கம், வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஆடவர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் (253.2 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். இந்த பிரிவில் அஜர்பைஜானின் ருஸ்லான் லுனேவ் (251.9) வெள்ளிப்பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் வருண் 250.3 புள்ளிகளுடன் நூலிழையில் வெளிப்பதக்கத்தை தவறவிட்டு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதி

தில்லியில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 48 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் (ஹரியானா) தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் மடோகா வாடாவை புள்ளிகள் கணக்கீடுவதற்குள் ஆக்ரோஷ பஞ்ச்களால் (குத்து) நாக் அவுட் செய்து அரையிறுதிக்கு முன்னேறினார். நிது கங்காஸ் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு பதக்கம், அதாவது குறைந்த பட்சம் ஒரு வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

இந்திய வீராங்கனையின் தாக்குதலால் சுருண்ட ஜப்பான் வீராங்கனை

காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியனான இந்திய வீராங்க னை நிது கங்காஸ் ஆக்ரோஷத்துடன் ஜப்பான் வீராங் கனை மடோகா மீது தொடக்கம் முதலே சரமாரியாக பஞ்ச்களை தொடுத்தார். ஒருகட்டத்தில் நிது கங்காஸ் பஞ்ச்களை தாக்குப்பிடிக்க முடியாமல் மடோகா சுருண்டார். உடனடியாக மடோகாவின் நிலை  அறிந்த நடுவர் போட்டியை நிறுத்தி நிதுவுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும் படி கட்டாயப்படுத்தினார். நடுவர் நாக் அவுட் (RSC) உத்தரவை கொடுக்கவில்லை என்றால் ஜப்பான் வீராங்கனை மடோகாவின் நிலையை இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மேலும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்.

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து
300% அதிகரித்த பரிசுத் தொகை

20வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான சவூதி அரேபியாவில் வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.  6 கண்டங்களில் இருந்து மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை கடந்த சீசனை விட 300% அதாவது 10 மடங்கு அதிகரித்து, பரிசுத்தொகையாக ரூ.1,239 கோடி (150 மில்லியன் டாலர்) அறிவிக்கப்பட்டுள்ளது. 19-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடான  பிரான்சில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை வெறும் ரூ.247 கோடியாக (30 மில்லியன் டாலர்) மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

;