games

img

விளையாட்டு செய்திகள்

தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இன்று 4-ஆவது டெஸ்ட் போட்டி

5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 4-ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் வெள்ளியன்று தொடங்குகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால், இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து
(முதல் நாள்)
நேரம் : காலை 9:30 மணி 
இடம் : ஜேசிஏ மைதானம், ராஞ்சி, ஜார்க்கண்ட்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)