games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

மேற்கு இந்தியத் தீவுகளும் அதிர்ச்சி தோல்வி

ஸ்காட்லாந்து அணி புரட்டியெடுத்தது

2 முறை டி-20 உலகக்கோப்பை வென்ற அணியான மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் தரவரிசை காரணமாக தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்  சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில் தனது முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் கத்துக்குட்டி ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. திங்க ளன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் பலமான மேற்கு  இந்தியத் தீவுகள் அணியை 42 ரன்கள்  வித்தியாசத்தில் புரட்டியெடுத்து அபார வெற்றி பெற்றது. (ஸ்கோர் : ஸ்காட்லாந்து : 160/5 (20), மேற்கு இந்தியத் தீவுகள் 118/10 (18.3))

இன்றைய ஆட்டங்கள்
நமீபியா - நெதர்லாந்து
நேரம் : காலை 9:30 
இலங்கை - 
ஐக்கிய அரபு அமீரகம்
நேரம் : மதியம் 1:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : சிமோண்ட்ஸ் மைதானம், கீலாங்

 

இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் தோல்வி ஏன்?

முன்னாள் உலக சாம்பியன் களான இலங்கை, மேற்கு  இந்தியத் தீவுகள் அணிகள் கத்துக் குட்டி அணிகளிடம் தோல்வி கண்டு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன. கிரிக்கெட் உல கில் அதிர்ச்சி தோல்வி சகஜம் தான்  என்றாலும், தோல்விக்கான கார ணங்கள் மாறுபட்டு இருக்கும். அதே போல தான் இலங்கை, மேற்கு இந்தி யத் தீவுகள் அணிகளின் தோல்விகள் சற்று வித்தியாசமாக உள்ளது.

இலங்கை - நமீபியா

நடப்பு ஆசிய சாம்பியன், முன்னாள் உலக சாம்பியன் நம்மிடம்  எப்படி வெற்றி பெறும் என நமீபியா வை மிகவும் அசால்ட்டாக எதிர்கொண்டது இலங்கை அணி. இலங்கை அணி நமீபியா ஒரு கத்துக்குட்டி என நினைத்ததே தவிர அந்த அணியின் பின்புலத்தை பற்றி எதுவும் நினைக்கவில்லை. உண்மையில் நமீபியா கிரிக்கெட் ரத்தம் உள்ள செழிப்பான நாடாகும். காரணம் கிரிக்கெட் உலகின் பலமான அதாவது மிரட்டல் அணியான தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு அருகில் உள்ள நாடு தான் நமீபியா. இந்தியா, பாகிஸ்தானை பார்த்து கிரிக்கெட் உலகில் ஆப்கானிஸ்தான் எப்படி வளர்ந்ததோ அதே வியூகத்தில் தான் தென் ஆப்பிரிக்காவை பார்த்து நன்கு வளர்ந்துள்ளது நமீபியா. இந்த விவகாரத்தை எல்லாம் அறியாமல் பெயரளவு கத்துக்குட்டி என நமீபியாவை அசால்ட்டாக நினைத்து அந்த அணியிடம் மரண அடி வாங்கி கிரிக்கெட் உலகில் ஒரு பெரிய அவப்பெயரை பெற்றுள்ளது. (ஸ்கோர் : நமீபியா 163/7 (20), இலங்கை 108/10 (19))

மேற்கு இந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்து

பிரிட்டன் துணை கண்டத்தில் உள்ள  ஸ்காட்லாந்து அணி இங்கிலாந்து நாட்டிற்கு மிக அருகில் இருப்பதால் அந்த அணியின் கிரிக்கெட் குண நலன்களை உள்வாங்கி மிக சீரிய வேகத்தில் வளர்ந்து வருகிறது ஸ்காட் லாந்து. ஸ்காட்லாந்து அணியை பற்றி  மேற்கு இந்தியத் தீவுகள்  அணிக்கு  நன்றாகவே தெரியும்.  ஆனால்  நம்மை என்ன செய்யப் போகிறது. எவ்வ ளவு தூரம் செல்வார்கள் எவ்வளவு ரன் அடிப்பார்கள், நம்மால் அடிக்க  முடியாதா? என பல்வேறு அசால்ட்டான தைரியத்தால் 160 ரன்கள் குவிக்க விட்டு, அந்த அணியின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப் பிடிக்கமுடியாமல் இறுதியில் மண்ணை கவ்வியது தான் மிச்சம் மேற்கு இந்தியத் தீவுகள். கத்துக்குட்டி அணிகளே கலக்க லாக விளையாடி வருவதால் உல கக்கோப்பை தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்களே அரையிறுதி போல் எதிர்பார்ப்புடன் நகர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை எயிம்செஸ் ரேபிட்  கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாடு வீரர்

ஆன்லைன் செஸ் தொடரான எய்ம்செஸ் ரேபிட் தொடரின் ஒன்ப தாவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் தமிழ்நாடு வீரரும், இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான டி குகேஷ், உலக சாம்பியனும், நார்வே நாட்டின் அதிரடி  வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் உலக சாம்பி யனை வீழ்த்திய இளையவர் என்ற பெருமையுடன் புதிய வரலாறு படைத்துள் ளார் குகேஷ் (16 வயது). கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனை மற்றொரு தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவிடம் (17 வயதில்) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எயிம்செஸ் ரேபிட் தொடரில் போலந்தின் ஜான் கிரிஸ்டோஃப் டுடா (25 புள்ளிகள்) முதலிடத்திலும், ஷாக்ரியார் மாமெடியாரோவ் (அஜர்பைஜான் - 23 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், கார்ல்சன் (நார்வே), குகேஷ் (இந்தியா), அர்ஜுன் (இந்தியா) ஆகிய மூவரும் 21 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் உள்ளார்கள்.