games

img

இயற்கையுடன் விளையாடும் வாய்ப்பு பறிபோனது

இந்தியாவின் அழகிய கிரிக்கெட் மைதானமும், இமயமலைச்சாரலில் உள்ள ஒரே  கிரிக்கெட் மைதானமுமான  தர்மசாலா இமாச்சலப்பிரதேச மாநி லத்தில் உள்ளது. மைதான பெவிலி யனில் இருந்து தரையை பார்த்தால் கிரிக்கெட், சற்று 90 டிகிரி மேலே பார்த்தால் பனிபடர்ந்த இமயமலை, 120 டிகிரி மேலே பார்த்தால் தரையை தொடும் மேகங்கள் என மூன்று சிறப்பு அம்சங்கள் இருப்பதால் இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் பார்ப்பது தனி சொர்க்கம்தான். பொதுவாக தர்மசாலா மைதானத்தில் ஒருநாள், டி-20 தொடர், ஐபிஎல் தொடரின் சில ஆட்டங்களே நடைபெறும். ஆனால் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி எப்பொழுதுதாவதுதான் நடை பெறும். நீண்ட காலத்திற்கு பிறகு  தர்மசாலாவில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி நடத்த  அறிவிக்கப்பட்ட நிலையில், அவுட் பீல்டு, புல் இல்லா சூழ்நிலையால் அங்கு  நடை பெறவிருந்த டெஸ்ட் போட்டி  ரத்து  செய்யப்பட்டுள்ளது. அங்கு டெஸ்ட் போட்டி நடைபெறும் வாய்ப்பு  மட்டுமல்ல, வீரர்கள் இயற்கையுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பையும் இழந்தனர்.