(அக்., 16 - நவ., 13, ஆஸ்திரேலியா)
மிகக் குறுகிய காலத்தில் கத்துக்குட்டி பிரிவில் இருந்து பலமான அணியாக வளர்ந்துள்ள ஆப்கானி ஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் 8-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் நேரடியாக “சூப்பர் 12” சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இளம்வீரர்கள், பயமரியா பேட்டிங், துடிப்பான பீல்டிங் என இரு அணிகளும் சரிசம பலத்தில் இருப்பதால் உலகக்கோப்பை தொடருக்கு தனித்தனியாக விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பார்ம் பிரச்ச னை குறித்து திடமான தகவல் இல்லை என்பதால் 8-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் எவ்வளவு தூரம் பயணிக்கும் என திடமாக கணிக்க முடியாது. முக்கியமாக அதிரடிக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலிய மண்ணில் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திற்கு போதுமான அனுபவம் வேறு இல்லை. மிதவேக பந்துவீச்சுகளை மட்டுமே சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் மட்டுமே இருப்பதால் மிரட்டல் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடு களங்களை சமாளிப்பது மிகவும் கடினமான விசயம் ஆகும். இதனால் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளின் ஒவ்வொரு போட்டிகளும் ஆய்வு செய்யப்படும் அளவிற்கு கிரிக்கெட் உலகம் உற்றுநோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்கள் விபரம்
வங்கதேசம்
கேப்டன் : ஷகீப் அல் ஹாசன் (ஆல்ரவுண்டர்)
பேட்டிங் : நஜ்முல் ஹுசைன், சபீர் ரஹ்மான், யாசிர் அலி
விக்கெட் கீப்பர் : லிட்டன் தாஸ், நூருல் ஹசன்
ஆல்ரவுண்டர் : அபீப் ஹுசைன், மோசாடேக் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஜ், முஹம்மத் சைபுதீன்
பந்துவீச்சு : தஷ்கின் அஹமத், முஸ்டாபிஜூர் ரஹ்மான், எபோடட் ஹுசைன், நசும் அஹ்மத், ஹசன் மஹ்மூத்
ஆப்கானிஸ்தான்
கேப்டன் : முகமது நபி (ஆல்ரவுண்டர்)
பேட்டிங் : நஜிபுல்லா சத்ரன், ஹஸரத்துல்லா ஸசாய், இப்ராஹிம் சத்ரன், உஸ்மான் கனி, டார்விஸ் ரசூலி,
விக்கெட் கீப்பர் : ரகமனுல்லா குர்பாஸ்
பந்துவீச்சு : அசமத்துல்லா ஒமர்ஸாய், பரீத் அகமத் மாலிக், பசல் பருக்கி, முஜிபூர் ரகுமான், நவீன் உல் ஹக், கியாஸ் அகமத், ரஷித் கான், சலீம் சபி