games

img

சையது முஷ்டாக் அலி டி-20 லீக்.... இறுதியில் தமிழ்நாடு...

அகமதாபாத் 
ஐபிஎல் தொடருக்கு பிறகு நாட்டின் முதன்மையான  டி-20 தொடரான  சையது முஷ்டாக் அலி டி-20 லீக் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. 

இந்திய மாநிலங்களின் பெயரில் 33 அணிகளும், பரோடா, விதர்பா, சவுராஷ்டிரா, சர்வீசஸ், ரயில்வே என 5 பிற துறை அணிகள் என மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. "எலைட் பி" பிரிவில் பங்கேற்ற தமிழ்நாடு அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், பரோடா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.  

வெள்ளியன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது அரையிறுதி  ஆட்டத்தில்  தமிழ்நாடு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. குஜராத் சர்தார் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள்  குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மனரியா 51 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் முகமது  4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  தமிழக அணி வாலாஜாபேட்டையைச் சேர்ந்த அருண் கார்த்திக் (89 ரன்கள்)  அதிரடியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து இறுதிக்கு முன்னேறியது. 

தற்போது நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிகள் தமிழக  அணியுடன் கோப்பைக்கு பலப்பரீட்சையில் இறங்கும். 2-வது அரையிறுதியில்   பரோடா - பஞ்சாப் அணிகள்   விளையாடி  வருகின்றன.  இறுதி போட்டி ஜனவரி 31-ஆம் தேதி  சர்தார் படேல் மைதானத்தில் (குஜராத்) நடைபெறுகிறது.   

;