2 ஆண்டுக்கு ரூ.1770 கோடி வருமானம்
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக் கல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணி யான அல் நாசர் அணியுடன் விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். முக்கியமான நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஐரோப்பிய கிளப் அணிகளில் விளையாடி வரும் நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டும் புதிய நகர்வாக ஆசிய கிளப் அணியில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அல் நாசர் அணிக்கு 2025-ஆம் ஆண்டு வரை ஜூன் மாதம் 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்துள்ள ரொனால்டோ, சம்பளமாக 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1770 கோடி) பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுகமானது அல் நாசர்
சவூதி அரேபிய கிளப் அணிகளில் நட்சத்திர அணி யும், ஆசிய கிளப் அணிகளில் முன்னணி அணியான அல் நாசர் அணியில் 90% வீரர்கள் உள்நாட்டைச் சேர்ந்த வர்கள். உலகளவிலான நட்சத்திர வீரர்கள் யாரும் கிடை யாது. பிரேசில், கொலம்பியா, ஐவரி கோஸ்ட், கேமரூன், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த தலா ஒரு வீரர்கள் அணி யில் உள்ளனர். புரியும்படி சொன்னால் கால்பந்து உல கில் அல் நாசர் என்ற ஒரு நட்சத்திர அணி இருப்பது ரொனால்டோ சேர்ந்த பின்பு தான் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன ஆதரவு குரலால் பழிவாங்கப்பட்டாரா?
ரொனால்டோவுக்கு துருக்கி ஜனாதிபதி ஆதரவு
கத்தார் சீசன் உலகக்கோப்பையில் பயிற்சியாளர் உடனான மோதலால் நாக் அவுட், காலிறுதி ஆட்டங் களில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ தொடக் கத்திலேயே களமிறக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற் படுத்திய நிலையில், பாலஸ்தீன ஆதரவு குரலால்தான் ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பையில் பழி வாங்கப்பட்டார் என துருக்கியின் ஜனாதிபதி எர்டோ கன் கருத்து தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டின் கிழக் குப் பகுதியில் நடைபெற்ற இளைஞர்கள் கூட்டத்தில் பேசிய எர்டோகன்,”உலகக்கோப்பை ஆட்டங்களில் ரொனால்டோவை வீணடித்து விட்டார்கள். பாலஸ் தீனத்திற்கு ஆதரவாக ரொனால்டோ குரல் எழுப்பி வந்தார். இதனால் அவர் உலகக்கோப்பையில் பழி வாங்கப்பட்டுள்ளார். துரதிருஷ்டவசமாக அவர் மீது அரசியல் தாக்குதல் தடை விதித்தார்கள்” என குற்றம் சாட்டினார்.