games

img

டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்து பாகிஸ்தான் அணி புதிய சாதனை 

ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்து பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி  3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  

அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஸ்வான், 78 ரன்கள் எடுத்தார். ஹைதர் அலி 68 ரன்களும், நவாஸ் 30 ரன்களும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ். அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் நடப்பு  ஆண்டில் மட்டும் 18 போட்டிகளில் வென்று பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு அணி ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் 17 வெற்றிகளைப் பதிவு செய்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையைப் படைத்ததும் பாகிஸ்தான் அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

;