games

img

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு  

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. .

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்குத் தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். 

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே ஐசிசி வெளியிட்டது. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 1 இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. இந்நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும், நவம்பர் 3 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும் இந்தியா மோதுகிறது.

அதேபோல் நவம்பர் 5 ஆம் தேதி தகுதிசுற்று பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியுடனும், நவம்பர் 8 ஆம் தேதி தகுதிசுற்று ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடனும் இந்தியா மோதுகிறது. மேலும், முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 11 ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது. 

;