5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடருக்கு பட்டமாக வெறும் “4 இன்ச்” கோப்பைதான் வழங்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உள்ளங்கை யில் மடித்து கொண்டு செல்லப்படும் “4 இன்ச்” கோப்பைக்கு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து வீரர்கள் முரட்டுத்தனமாக மோதிக்கொள்வார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானது. இதற்கு ஒரு பிரம்மாண்ட வரலாறே உள்ளது. உலகக்கோப்பையை விட ஆஷஸ் வெல்வது தான் முக்கியம் என்று இரு நாட்டு ரசிகர்களும் சொல்வார்கள் என்றால் அந்த அளவுக்கு ஒரு கவுரவம் சார்ந்த பிரச்ச னையாக உள்ளது ஆஷஸ் தொடர். வெட்டுப் புலியைப் போல், இங்கிலாந்து மட்டும் ஒரிஜினல் கத்தி, ஆஸ்திரேலியா டூப்ளிகேட் கத்தியை வைத்து சண்டை போடுவதுபோல்தான் ஆட்டம் இருக்கும். அதாவது இங்கிலாந்து மண்ணில், அந்த அணி மட்டுமே தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தது. ஆஸ்திரேலிய அணி பலத்த அடியை மட்டுமே வாங்கிக் கொண்டே வந்தது. இதனால், ஆஸ்தி ரேலிய அணியை ‘ஜெயில் காலனி ஆப் இங்கிலாந்து’ என அழைக்கும் அவல மான நிலைக்குச் சென்றது.
இங்கிலாந் தில் குற்றவாளிகளை அடைத்துவைக்கும் இடம் என்பதே இதன் பொருள். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அசிங்கம்தான் என்றாலும், இந்த கல ங்கத்தை துடைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்ட நிலை யில், யாரும் எதிர்பாராத விதமாக 1882இல் ஆகஸ்ட் 29 அன்று இங்கிலாந்து அணி யை அதன் சொந்த மண்ணிலேயே (ஓவலில்) வீழ்த்தி, முதல் டெஸ்ட் வெற்றி யை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்தது. இந்த வெற்றியை ஆஸ்திரேலிய கிறிஸ்து மஸ் பண்டிகைக்கு நிகராக கொண்டாடித் தீர்த்துவிட்டனர். ஆஸ்திரேலிய பத்திரி கைகள் இங்கிலாந்தை பயங்கரமாக கிண்டல் அடித்து தலையங்கங்களை எழுதின. குறிப்பாக ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை, “ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் உயிரிழந்துவிட்டது” என்று கூறியது. இங்கிலாந்து நாளிதழ் “ இங்கிலாந்து கிரிக்கெட் மரணித்துவிட்டதாகவும், வெற்றி கொண்டாட்டமாக கோப்பை அல்லது ஸ்டம்ப் மூலம் எரிக்கப்பட்ட சாம்பலை ஆஸ்திரேலிய அணி எடுத்து செல்லப் பட்டதாகவும், கண்ணீர் அஞ்சலி வடிவில் செய்தி வெளியிட்டது.
இதனால் கடுப்பான இங்கிலாந்து கேப்டன் இவோ பிரான்சிஸ் பிலிக், அந்த சாம்பலை நாங்கள் மீட்டு எடுத்து இங்கிலாந்து கொண்டுவருவோம் என்று உறுதி அளித்து, அதே ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றதை அடுத்து, ஆஸ்திரேலிய பெண்கள் சிலர், ஒரு சிறிய கோப்பை மற்றும் ஸ்டம்பின் பைல்ஸ்களை எரித்து, அதன் சாம்பலை இங்கிலாந்து அணி கேப்டன் இவோ பிரான்சிஸ்க்கு வழங்கினர். அதை நினைவு கூறும் விதமாக ஸ்டெம்ப் பைல்ஸ் வடிவில் பிற்காலத்தில் ஆஷஸ் கோப்பையாக வழங்கப்பட்டது. பரிசு கோப்பையை அன்பளிப்பாக வழங்கிய ஆஸ்திரேலிய பெண்கள் குழுவில் புளேரான்ஸ் பார்பி என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் இங்கி லாந்து கேப்டன் இவோ பிரான்சிஸ். அதி லிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மாறி மாறி நடை பெறுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 72 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 34 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவும், 32 ஆஷஸ் தொடரை இங்கிலாந்தும் வென்றுள்ள நிலையில், 6 முறை தொடர் சமனில் முடிவடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.