games

img

ஐபிஎல் 2023... சென்னை சாம்பியன்... ஸ்பெஷல்...

16-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் மழை காரணமாக 48 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நிறைவு பெற்ற நிலையில், இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மாநில மற்றும் தமிழின அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் ஜடேஜாவின் பவுண்டரியால் திரில் வெற்றியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

முதல்முறையாக ஆனந்த கண்ணீருடன் கொண்டாடிய தோனி...

ஐபிஎல் தொடரில் 4 முறை  கோப்பை, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என  பல்வேறு கோப்பைகளை வென்று தந்தாலும்  தோனி உணர்ச்சி பொங்க கொண்டாட மாட்டார். ஆனால் 16-வது சீசன் ஐபிஎல் கோப்பை வென்றவுடன், கோப்பையை வெல்ல உதவியாக இருந்த ஜடேஜாவை கட்டி அணைத்து, தூக்கி ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினார்.

பெண் ரசிகைகளின் கண்ணீர் டூ  ஆனந்த கண்ணீர்...

கடைசி 2 ஓவர்களில் சென்னை அணிக்கு 20 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஆனால் களத்தில் இருந்த ஜடேஜா - துபே ஜோடி ரன் குவிக்க முடியாமல் திணறினர்.  இதனால் சென்னை அணி தோல்வி அடைந்து விடுமோ என்ற பயத்தில் பெண் ரசிகைகள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை அழுதுகொண்டே இருந்தனர். மைதானத்தை பார்க்காமல் அமர்ந்துவிட்ட னர். ஜடேஜா வெற்றி பவுண்டரி அடித்ததன் மூலமே எழுந்து என்ன நடந்தது “மஞ்சள் ரசிகர்கள்” பிளிறுகிறார் கள் என்பதை அறியாமல் அங்கும் இங்கும் பார்த்தனர். அப்பொழுதுதான் சென்னை அணி வெற்றி பெற்றது என்பது தெரிந்ததும் ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டாடினர். (ஜியோ சினிமாவின் 360 டிகிரி மூலம் பெண் ரசிகர்களின் கூட்டத்தின் ஆய்வு)

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக் கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5-வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள். இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி. இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.

மல்யுத்த போராட்டக்குழு  வாழ்த்து

ஒலிம்பிக் பதக்கநாயகியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்திற்கு எதிராக போராடி வரும், சாக் ஷி மாலிக் சென்னை அணி 5-வது முறையாக ஐபிஎல்  கோப்பையை கைப்பற்றியதற்கு வாழ்த்து தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கேக்கு வாழ்த்துக்கள். குறைந்தபட்சம் அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டம்...

சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவுடன் ரசிகர்கள் வீடுகள், தெருக்கள், சாலைகள் என பல்வேறு இடங்களில் கொண்டாடினர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட சில இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றால் கூட இந்தளவுக்கு கொண்டாடி இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு நள்ளிரவு முதல் அதிகாலை வரை கொண்டாடியுள்ளனர். புரியும்படி சொன்னால் சென்னை அணியின் கொண்டாட்டத்தை தமிழ்நாடே கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்கள், தோனி ரசிகர்கள் வீதியில் இறங்கி கொண்டாடியுள்ளனர். 

மஞ்சளாக மாறிய  சமூக வலைத்தளங்கள்... 

சென்னை அணி வெற்றியை கொண்டாடும் வகையில் வாழ்த்து, மீம்ஸ் என பல்வேறு விஷயங்கள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குவிந்ததால் எல்லாம்  மஞ்சள் மயமாக மாறியது.  தமிழ்நாடு ரசிகர்களால் 12 மணிநேரம் மஞ்சளாக மாறியது சமூக வலைத்தளங்கள். டிராபிக் ஆனதால் மற்ற செய்திகள், தகவல்கள் இறங்கவில்லை. செவ்வாயன்று மதியத்திற்கு மேல்தான் மற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் லேசாக இறங்கின. 

உறங்காமல் இருந்த தமிழ்நாடு...

இரவு 7:30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ரசிகர்கள் தூங்காமல் தொலைக்காட்சி, ஒடிடி-யை ஆன் செய்து, ஆட்டம் தொடங்கிவிட்டதா என்று அடிக்கடி பார்த்தப்படி இருந்தார்கள். நள்ளிரவு 11:45க்கு மேல்தான் ஆட்டம் தொடங்கி 1 மணிக்கு மேல் நிறைவு பெற்றது. அதுவரை அனைவரும் உறங்காமல் இருந்து சென்னை அணியின் வெற்றியை கொண்டாடியுள்ளனர். கிரிக்கெட் ஆர்வம் இல்லாதவர்கள் கூட சென்னை அணியின் ஆட்டத்தை கண்டு, வெற்றியை கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

தமிழ்நாடு வந்தது  சென்னை அணி...

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரவு முழுவதும் வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு செவ்வாயன்று காலையில் சென்னை அணி  குழு கிளம்பியது மதியம் 2 மணி அளவில் வெற்றி  கோப்பையுடன் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஆபாச செய்கை காட்டிய அமித் ஷா மகன் ஜெய் ஷா

வெற்றிக்கு 4 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணி தவித்தது. அப்பொழுது ஒன்றிய உள்துறை அமைச்சர் மகனும், இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா, சென்னை அணி இனி அவ்வளவு தான் என ஆபாச செய்கை மூலம் காண்பித்தார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனம் குவிந்து வருகிறது. முக்கியமாக சென்னை அணி ஆதரவு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குஜராத் கிரிக்கெட் வாரியத்திலேயே பணி புரியலாமே... இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் (பிசிசிஐ) ஜெய் ஷா கடந்த முறை போலவே நடப்பு சீசனிலும் குஜராத் அணிக்காக வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளார். பிசிசிஐ என்பது ஒரு நாட்டின் பொறுப்பு. உலகின் முக்கியமான கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பொறுப்பு. ஆனால் சாதாரண உள்ளூர் தொடருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் ஜெய் ஷா பிசிசிஐ பொறுப்பை கேவலப்படுத்தியுள்ளார். இதற்கு குஜராத் கிரிக்கெட் வாரியத்திலேயே ஜெய் ஷா பணிபுரியலாம்.


 

;