games

img

ஐபிஎல் 2021 : சென்னை - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 14-வது ஐ.பி. எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்கும் அணி எது என்பது நாளை தெளிவாகி விடும்.

இந்நிலையில், ஐ.பி.எல் லீக் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதுகிறது. ஏற்கனவே பிளே -ஆப் சுற்றை அடைந்துவிட்ட சென்னை அணி  13 ஆட்டங்கள் விளையாடி 9 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்து 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவே கடைசி லீக் போட்டி என்பதால், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியைப் பொறுத்தவரைப் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்யத் தீவிரம் காட்டுவார்கள். 

இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்குத் துபாயில் நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

;