games

img

விளையாட்டு...

இந்தியன் வேல்ஸ் : டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன் 

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு அடுத்து  மிகப்பெரிய (வடஅமெரிக்கா மட்டும்) தொடரான பிஎன்பி பரிபாஸ்  ஓபன் என அழைக்கப்படும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் கலிபோர்னியா நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் திங்களன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரருமான அல்காரஸ்  (19), ரஷ்யாவின் முன்னணி வீரரும், உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருப்பவரு மான மெத்வதேவை எதிர்கொண்டார்.  தொடக்கம் முதல் பரபரப்பாக நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

மற்ற சாம்பியன்கள்

ஆடவர் இரட்டையர் 
போபண்ணா (இந்தியா)-எப்டன் (ஆஸ்திரேலியா)
மகளிர் ஒற்றையர் 
ரைபகினா (கஜகஸ்தான்)
மகளிர் இரட்டையர் 
சினியாகோவா - கெர்ஜிசிகோவா (செக் குடியரசு)

பாகிஸ்தானில் ஆசியக்கோப்பை கிரிக்கெட்
இந்திய அணி பங்கேற்பது சந்தேகம்

ஒன்றிய அமைச்சர் காட்டமான பதில்

16-வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கு கிறது. இந்த தொடரில் பாதுகாப்பு பிரச்சனையை காரணமாக கொண்டு பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி போட்டியை மட்டும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கோரிக்கைவிடுத்தது.  இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வந்து இந்தியா விளையாடவில்லை என்றால், அடுத்து இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடரையும் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.  இதனால் உலக கிரிக்கெட் அரங்கில் சலசலப்பு ஏற்பட்ட  நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்து ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் புரியாத விளக்கம் அளித்துள்ளார். அதில்,”ஆசிய கோப்பையில் இந்திய அணி பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒன்றிய அரசிற்கு முதலில் அழைப்பு விடுக்கட்டும். அதன் பின்னர் விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மட்டுமே முடிவு செய்யும்”எனக் காட்டமாக கூறியுள்ளார். 

டபிள்யுபிஎல் டி-20 தொடர் : இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு

ஆடவருக்கு நடத்தப்படும் ஐபிஎல் தொடரை போல மகளிருக்கும் டபிள்யுபிஎல் என்ற பெயரில் நடப்பு ஆண்டு முதல் டி-20 லீக் தொடர் தொடங்குவதாக பிசிசிஐ  அறிவித்த நிலையில், மார்ச் 4-ஆம் தேதி டபிள்யுபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தொடங்கின. தொடக்கம் முதலே சுவாரஸ்யமாக  நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் ஆட்டங் கள் செவ்வாயன்று நிறைவு பெறும் நிலையில், வெள்ளியன்று எலிமினேட்டர் ஆட்டங்கள் தொடங்க உள்ளன. (செவ்வாயன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது)

இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டங்கள்

பெங்களூரு - மும்பை
நேரம் : மாலை 3:30 மணி
இடம் : பாட்டில் மைதானம், நவிமும்பை

உத்தரப்பிரதேசம் - தில்லி
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா ஓடிடி (இலவசம்)