பொதுவாக கோடை ஒலிம்பிக் தொடரில் வல்லரசு நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும். மக்கள் தொகை, ராணுவம், பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த நாடுகள் பதக்கப்பட்டியலில் டாப் ஆர்டரில் இருக்கும். ஆனால் குளிர்கால ஒலிம்பிக் தொடர் களில் எல்லாம் தலைகீழ் தான். அதாவது இந்த தொடரில் வல்லரசு நாடுகள், பலம் வாய்ந்த என்ற பேச்சுக்கே இடமில்லை. கத்துக்குட்டி நாடுகள் கூட குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பதக்க மழையில் நனையும். இந்த வரலாற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு வடதுருவத்தில் உள்ள சிறிய நாடான நார்வே தான். நார்வே நாட்டு வீரர்-வீராங்கனை கள் கோடை ஒலிம்பிக் தொடரில் அவ்வளவாக சாதிக்க மாட்டார்கள். ஆனால் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அவர்களது சாதனை யை மற்ற நாடுகள் சேஸ் செய்வது சற்று சவாலான காரியம் தான்.
நார்வே குளிர்கால ஒலிம்பிக்கில் சாதிப்பதை பற்றி விளையாட்டு வல்லுநர்களிடம் கேட்டால் அவர்கள் ஒரே காரணமாக சொல்லுவார்கள். அது யாதெனில் வடதுருவத்தில் பனியோடு சேர்ந்து அந்நாட்டு மக்கள் வாழ்ந்து பழக்கப்பட்டிருப்பதால் அவர்கள் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வரலாறு படைக்கிறார்கள் என கருத்து கூறுவார்கள். இது ஒரு காரணமாக இருந்தாலும் உண்மை யில் மற்றொரு காரணமும் உள்ளது. நார்வே நாட்டு வீரர் - வீராங்கனைகள் தங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை விருப்பப்படி சிறப்பாக செய்வார்கள். அதாவது சீரிய புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு தான் விளையாடும் விளை யாட்டில் தனி சாதனையை நிகழ்த்துவார்கள். கோடைகால ஒலிம்பிக்கில் இதே போல தான் தனக்கு எந்த விளையாட்டு நன்றாக தெரியுமோ அதை மட்டும் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்லுவார்கள். அதே போல தான் தன்னுடைய காலநிலை விளை யாட்டான குளிர்கால ஒலிம்பிக்கில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் போல நார்வே நாடு ஒலிம்பிக் தொடர்களில் தேவை யில்லாமல் பெயரளவிற்கு எந்த வீரர் - வீராங்கனைகளையும் களமிறக்காது. உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தகுதி, திறமை போன்றவைகளை ஆராய்ந்த பின்னரே வீரர் - வீராங்கனைகளை தேர்வு செய்கிறது நார்வே. இதுவரை நடைபெற்றுள்ள 24 குளிர்கால ஒலிம்பிக் தொடரில் நார்வே நாடு பதக்கப்பட்டியலில் 2 முறை தான் டாப் 10க்கு மேல் சென்றுள்ளது. 9 முறை முதலிடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 12 தொடர்களில் டாப் 5 இடம். ஒருமுறை 7-வது இடத்தை பிடித்துள்ளது. ஞாயிறன்று நிறைவு பெற்ற பெய்ஜிங் (24-வது) ஒலிம்பிக் தொடரில் 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங் கள் வென்று முதலிடத்தை பிடித்தது. குறிப்பாக நடப்பு சீசன் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அதிக தங்கம் வென்று குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அதிக தங்கம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை நார்வே தனதாக்கிக் கொண்டது. ஜெர்மனி வழக்கம் போல தனது பதக்க வேட்டையில் மாற்றம் இல்லாமல் 12 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், போட்டியை நடத்திய சீனா 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 15 பதக்கங்களு டன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 4-வது இடத்தை பிடித்தது. குளிர்கால ஒலிம்பிக் தொடரில் நல்ல பார்மில் விளையாடும் ரஷ்யா 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.