games

img

விளையாட்டு...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை மிரட்டல்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே ஒரு கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடரின் 92-வது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் மகளிர் ஒற்றை யர் பிரிவு 3-வது சுற்றில் ரஷ்ய வீராங் கனை கசட்கினா, அமெரிக்காவின் பெய்டோனை 6-0, 6-1 என்ற செட்  கணக்கில் புரட்டியெடுத்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பொதுவாக டென்னிஸ் உலகில் முதல் சுற்று ஆட்டங்களில் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறுவது இயல்பா னது. ஆனால் 3-வது சுற்றுக்கு மேல்  6-0, 6-1 என்ற செட் பாணியில் வெற்றி பெறுவது கடினமானது என்றாலும், ரஷ்ய வீராங்கனை கசட்கினா தனது அதிரடி மூலம் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் மிரட்டல் அதிரடியுடன் வெற்றிபெற்று கலக்கியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளராக கார்ல் ஹூப்பர்

50 ஓவர் உலகக்கோப்பை தொட ரின் 13-வது சீசன் வரும்  அக்டோபர் மாதம்  இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் உதவி பயிற்சியாளராக கார்ல் ஹூப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கார்ல் ஹூப்பர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பேட்டிங், பந்துவீச்சில் (சுழற்பந்து) சரிசமமான அனுபவம் கொண்டவர் என்பதால் மேற்கு இந்தி யத் தீவுகள் அணி வரும் காலங்களில் முற்றிலும் மாற்றுப்பாதையில் பய ணித்து இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கு இந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் டி-20 தலைமை பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் அணியில் இணையவில்லை. அதனால் தற்காலிக பயிற்சியாளர் பொறுப்பு மூலம்  ஆண்ட்ரே கோலி  அணியை கவனித்து வருகிறார்.

ஐபிஎல் நன்றாக விளையாடிய ரஷித் கான் சொந்த நாட்டிற்கான தொடரில் விலகல்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், இரண்டாம் தர பேட்டரு மான ரஷித் கான் ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் குஜராத் அணிக்காக விளையாடினார்.  ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்ற ரஷித் கான், தொடர் நிறைவு பெற்றபின், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி களில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் நல்ல உடற்தகுதி யுடன் விளையாடிய ரஷித் கான் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக காரணம் என்ன? என சர்ச்சை கருத்துக்கள் வெளி யாக, கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார் ரஷீத் கான். அதா வது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதாக அறி வித்துள்ளார். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இன்னும் 3 நாட்கள்...

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா
நாள் : ஜூன் 7 முதல் 11 வரை
இடம் : லார்ட்ஸ் மைதானம், லண்டன், இங்கிலாந்து
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்

 

;