games

img

ஐநாக்ஸில் நேரடி காட்சியுடன் கவுரவிக்கும் பெங்கால் கிரிக்கெட் சங்கம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி யின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி இங்கிலாந்து தொடரோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு அளிக்கவுள்ளார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளி லும் அதிக விக்கெட்டுகள் (353) எடுத்த வீராங்கனை என்கிற சாதனை யுடன் விடைபெறும் ஜுலான் கோஸ்வாமியின் ஓய்வை கவுரவிக்கும் விதமாக அவர் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியான சனியன்று நடைபெறும் இங்கிலாந்து தொடரின் கடைசி ஆட்டத்தை (கடைசி ஒருநாள் போட்டி) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐநாக்ஸ் திரை யரங்கில் பெரிய திரையில் ஒளிபரப்ப பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பெங்கால் கிரிக்கெட்  சங்கத்தின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெரிய திரையில் ஒளிபரப்பப்படுவதால் ஐநாக்ஸ் திரையரங்கில் சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பிரதாய போட்டி

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை டி-20 தொடரை 2-1 இழந்தது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகளை ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், வேறு சம்பிரதாய போட்டியாக கடைசி ஒருநாள் போட்டி சனியன்று இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
 

;