games

img

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவிக்க உள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமில்லை என்றும் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் கேப்டன் ஜோ ரூட்டிடம், மொயீன் அலி தகவல் தெரிவித்துவிட்டதாகவும் அறியப்படுகிறது. எனினும் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

34 வயதாகும் அவர், இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது ஆஃப் ஸ்பின் மூலம் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொயீன் அலி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;