games

img

ஸ்ரீநாத்துக்கு குவியும் பாராட்டு

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கர்நாடக அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றியவருமான ஸ்ரீநாத் தன்னுடைய சொந்த ஊரின் மைதானம் என்றெல்லாம் பாராமல் நேர்மையுடன் செயல்பட்டு பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் சரியில்லை என மதிப்பீட்டை வழங்கியுள்ளார். இதற்கு இந்திய கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்புகள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.