games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டங்கள்

இங்கிலாந்தை சமாளிக்குமா ஈரான்?

உலகக்கோபைபை கால்பந்து தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில்  பலமான இங்கிலாந்து அணியை ஆசிய அணியான  ஈரான் எதிர்கொள்கிறது. அனைத்து வரிசையிலும் சிறந்த  ஆட்டக்காரர்களைக் கொண்ட அணியாக இங்கிலாந்து களமிறங்குகிறது.   உலகக்கோப்பை தகுதி  சுற்று தகுதிச்சுற்று போட்டிகளில் 8  ஆட்டங்களில் மொத்தம் 37 கோல்கள்  அடித்து 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள்  பேசும் அளவிற்கு சிறப்பானதாக இல்லை. இருப்பினும் மின்னல்  வேக தாக்குதல் பாணி ஆட்டம் இங்கிலாந்து  அணிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பயிற்சியார் காரெத் சவுத்கேட்.  கோலடிக்க மாட்டோம், கோல் போட விடமாட்டோம் என்ற வகையில் செயல்படும் ஈரான் அணி  தகுதிச் சுற்று போட்டிகளின் 10 ஆட்டங்களில் 8-இல்  வெற்றி பெற்று  குழுச்சாம்பியனாக உலகக்கோப்பையில் பங்கேற்கிறது. மெஹ்தி தரேமி, அல்ரெஸா ஜஹன்பக்ஷ் ஆகிய முன்கள வீரர்களுடன் மஜித் ஹுசைனி தலைமையிலான தடுப்பு ஆட்டக்காரர்கள் இணைந்து இங்கிலாந்துக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து - ஈரான் (2வது லீக்)
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : கலீபா மைதானம்