games

img

கோல் அடிக்கும் கால் காஸ்ட்ரோவுடையது... பந்து அமெரிக்க ஏகாதிபத்தியம்....

மதுரை:
கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் எனது கால் காஸ்ட்ரோவுடையது. அடிக்கும் பந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் எனக் கூறியவர் மாரடோனா என்று புகழாரம் சூட்டினார்மதுக்கூர் இராமலிங்கம்.

மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான்  மாரடோனாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்  மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பி.கோபிநாத் சிலம்பப் பயிற்சி பள்ளி ஆசிரியர்கோ.வடிவேல், பகுதிக்குழுப் பொருளாளர் டி. ஜான் மைக்கேல், வாலிபர் சங்க பழங்காநத்தம் பகுதி குழு செயலாளர் க. கௌதம் பாரதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சரண்  கட்சியின் அரசரடி பகுதிகுழுச்  செயலாளர் கு.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி நிகழ்வில் பேசிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், “லத் தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு சின்னஞ்சிறிய நாடு அர்ஜெண்டினா.  இந்த நாட்டின் வீரர் மாரடோனா இறப்பிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் அஞ்சலி நிகழ்வை நடத்துகிறது. மாரடோனா அனைத்துத் தரப்பு மக்களும் விளையாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறியவர் மட்டுமல்ல ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நின்றவர். விளையாட்டையும் தாண்டி ஆழமான அரசியல் உணர்வு கொண்டவர்.  அவர் தனது ஒரு கையில் சேகுவேராவின் உருவத்தையும், காலில் பிடல் காஸ்ட்ரோவின் உருவத்தையும் பச்சை குத்திக் கொண்டுள்ளார். சேகுவோரா  அர்ஜென்டினாவை சேர்ந்தவர் அதனால் குத்தியுள்ளார். ஏன்பிடல் காஸ்ட்ரோவின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார் என்ற கேள்வியெழுந்தபோது, அவரே பிடல் காஸ்ட்ரோவிடம் கூறியது, “ ஒவ்வொரு முறை கோல் போடும் வாய்ப்பு கிடைக்கும்போதும் நான் என் காலை பிடல் காஸ்ட்ரோவாக நினைத்துக்கொள்வேன். கிடைக்கும்  பந்தை அமெரிக்காவாக நினைத்துக்கொள்வேன். ஏகாதிபத்தியத்தை எத்தித் தள்ளும் வாய்ப்பு  எனக்குக்  கிடைத்துவிட்டதாக  மகிழ்ச்சிகொள்வேன்” என்பதுதான்.

காஸ்ட்ரோ எனது தந்தை...
மாரடோனா மட்டுமல்ல உலகப் புகழ பெற்ற ஓவியர் பிக்காசோ, உலகம் போற்றிய நடிகர் சார்லி சாப்ளின் இவர்களும் ஏதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை, பொதுவுடைமையை, சோசலிசத்தை நேசிப்பவர்களாக  இருந்தார்கள்.  உலகத்தில் மிகப் பெரிய கலைஞர்கள் எல்லாம் கம்யூனிச சித்தாந்தத்தோடு வாழ்ந்துள்ளார்கள். மாரடோனா போதைப் பழக்கத்திற்கு அடிமையான போது அவரை மீட்டெடுத்தது பிடல்காஸ்ட்ரோ தான். எனவே காஸ்ட்ரோ எனது தந்தை எனக் கூறினார். ஓடுக்கப்பட்ட பூர்வ குடிமக்கள் பகுதியைச் சேர்ந்த மாரேடோனா உலகம் போற்றும் கால்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்தார் என்றார்.

;