games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின்  22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

2 நாட்கள் ஓய்வு

22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஞாயிறன்று அதிகாலை காலிறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், டிசம்பர் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி அதிகாலை அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

7-வது முறையாக
மீண்டும் பிரான்ஸ்

22வது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று அதிகாலை நடை பெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.  தொடக்கம் முதலே தாக்குதலை தொடங்கிய பிரான்ஸ் அணி ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் கோல டித்தது. பிரான்ஸ் வீரர் டச்சோமேனி அடித்த இந்த கோல் மிகவும் பிரம்மாண்டமானது ஆகும். பெனால்டி ஸ்பாட் உள்ளே வராமல் ட்ச்சோமேனி கோலடித்து கலக்கினார். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பவுல் மூலம் பெனால்டி வாய்ப்பு கிடைக்க இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி  கோலடித்தார். கோல் கணக்கு சமன் ஆனதால் 55-வது நிமி டத்தில் இருந்து, இரு அணிகளும் தாக்குதல் பாணி ஆட்டத்தை தொடங்கியது.  இதனால் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர இரு நாட்டு ரசிகர்களும் இருக்கை யில் அமராமல் நின்று கொண்டே போட்டியை ரசித்தனர். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரௌட் பல்வேறு தடுப்புகளை தாண்டி தலையால் முட்டி கோல டித்தார். 84-வது நிமிடத்தில் இங்கி லாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி  வாய்ப்பை அந்த அணி கேப்டன் ஹாரி வீணடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்த னர்.  ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (90+8’) கிடைத்த ஸ்பாட் கிக் கோல்  வாய்ப்பை இங்கிலாந்து வீரர் ராஷ்போர்ட் நூலிழையில் கோட்டை விட பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, 7ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் அணியை தொடர்ந்து கரையேற்றும் கிரௌட்

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி கடந்த சீசனை போலவே கத்தார் சீசனிலும் சூப்பர் பார்மில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ் அணியில் மாப்பே, கிறிஸ்மேன், டெம்ப்லே போன்ற பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் பிரான்ஸ் அணியை கரையேற்றுபவர் முன்கள வீரர் கிரௌட்தான். நடப்பு சீசனில் கிரௌட் 4 கோலடித்துள்ளார். இந்த 4 கோல்களும் பிரான்ஸ் அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் வெற்றியை தேடி தந்துள்ளது. காலிறுதி ஆட்டத்தில் கூட கிரௌட் அடித்த கடைசி நேர கோலால்தான் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதி ஆட்டங்கள்

அர்ஜெண்டினா - குரோஷியா
நாள் : டிசம்பர் 14-ஆம் தேதி

பிரான்ஸ் - மொராக்கோ
நாள் : டிசம்பர் 15-ஆம் தேதி

இரண்டு ஆட்டங்களும் நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும்