games

img

உடனுக்குடன் “ரிப்ளே” : அசத்தும் புதிய தொழில்நுட்பம்

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், விளையாட்டு உலகம் இந்த புதிய தொழிநுட்ப முறைகளால் பல்வேறு வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் முதல் எடுத்துக்காட்டு தற்போது  நடைபெற்று வரும் 22-வது சீசன் உலகக்கோப்பையின்  “ரிப்ளே (மீண்டும் ஒரு  எடுத்துக்காட்டு ஒளிபரப்பு)” முறையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் தான். பொதுவாக ஒரு நிகழ்வை “ரிப்ளே” செய்ய குறைந்தப் பட்சம் 20 வினாடிகள் ஆகும். ஆனால் கத்தார் உலகக்கோப்பை தொடரில் வெறும் 5 வினாடிகளில்  “ரிப்ளே” ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது கால்பந்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைகொடுத்துள்ளது.