games

img

அதிக எண்ணிக்கையிலான ஹாட்ரிக் கோல் - ரொனால்டோ புதிய சாதனை 

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றுப் போட்டியில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியும், லக்சம்பர்க் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். இதனால் சர்வதேச கால்பந்து போட்டியில் 10 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை  ரொனால்டோ பெற்றுள்ளார்.

மேலும், இந்த ஹாட்ரிக் கோலால் ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டியில் அடித்த கோல் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;