games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல்  டிசம்பர் 18 வரை

இன்றைய ஆட்டங்கள்

குரூப் “ஏ”

ஈகுவடார்   -  செனகல்

நேரம் : இரவு 8:30 மணி/ இடம் : கலீபா

குரூப் “ஏ”

நெதர்லாந்து -  கத்தார்

நேரம் : இரவு 8:30 மணி / இடம் : அல் பாயித்

குரூப் “பி”

அமெரிக்கா -  ஈரான்

நேரம் : நள்ளிரவு 12:30 மணி
(புதனன்று அதிகாலை) / இடம் : அல் துமமா

குரூப் “பி”

   வேல்ஸ்   -   இங்கிலாந்து

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (புதனன்று அதிகாலை) / இடம் : அஹமத் பின் அலி

ஆட்ட நேரங்கள் மாற்றம்

திங்களன்று நடைபெறும் ஆட்டங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடங்கிய தினத்திலிருந்து ஒவ்வொரு நாளும் மதியம்  3:30,  மாலை 6:30, இரவு 9:30, நள்ளிரவு 12:30 மணி ஆகிய 4 நேரங்களில் 4 ஆட்டம் நடைபெற்றது. ஆனால் திங்களன்று நடைபெறும் லீக் ஆட்டங் களின் நேரம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இரவு 8:30 மணிக்கு 2 ஆட்டங்கள், நள்ளிரவு 12:30 மணிக்கு 2 ஆட்டங்கள் என 4 ஆட்டங்கள் நடை பெறுகிறது. வரும் காலங்களில் இதே நேரங்களில்தான் ஆட்டம் நடைபெறும்.

மொராக்கோ அணியிடம் படுதோல்வி பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறை

குரூப் “எப்” லீக் ஆட்டத்தில் பலம்  வாய்ந்த ஐரோப்பிய அணி யான பெல்ஜியம், இரண்டாம் தர  ஆப்பிரிக்க அணியான மொராக்கோவை எதிர்கொண்டது. தனி வியூகம் அமைத்து தொடக்கம் முதலே தாக்குதல் பாணி ஆட்டத்தை கையிலெடுத்தது மொராக்கோ. இதனை எதிர்பாராத பெல்ஜி யம் தொடக்கம் முதலே திணறியது. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி  வைத்தியம் அளித்தது மொராக்கோ. பெல்ஜியத்தின் தோல்வி போட்டி நடை பெற்ற மைதானத்தில் எவ்வித எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தி, கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீ சார் வன்முறையை கட்டுப்படுத்தி சம்பவ  இடத்தில் இருந்த சில ரசிகர்களை கைது செய்தனர். கடந்த உலகக்கோப்பையில் பெல்ஜியம் அணி அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் தோல்விகண்டு, மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் இங்கி லாந்து அணியை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்தது. இம்முறை பல்வேறு பார்ம் பிரச்ச னையால் சிக்கித்தவிக்கிறது பெல்ஜியம்.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.



 

 

 

;