games

விளையாட்டு செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து - 2024

அரையிறுதியில் பிரான்ஸ், ஸ்பெயின்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று இரவு மற்றும் சனியன்று அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

உள்ளூர் அணியை பந்தாடிய ஸ்பெயின்

முதல் காலிறுதி ஆட்டத் தில் ஜெர்மனி - ஸ்பெ யின் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலை யில், ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி கோலடித்தார். 88 ஆவது நிமிடம் வரை பதிலு க்கு ஜெர்மனி கோலடிக்கா மல் இருந்த நிலையில், இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி எளிதாக வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. 

ஆனால் 89ஆவது நிமி டத்தில் ஜெர்மனி வீரர் கோல டிக்க ஆட்டம் பரபரப்பானது. 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் ஆளுக்கொரு கோல்களுடன் சமனில் இருந் ததால் கூடுதல் நிமிடம் கடை பிடிக்கப்பட்டது. கூடுதல் நிமி டத்தின் கடைசி நேரத்தில் (119 ஆவது நிமிடம்) ஸ்பெயின் வீரர் மெரினோ கோலடித்த நிலை யில், இதுவே வெற்றி கோலாக அமைந்தது. 

ஆட்டநேர முடிவில் 3  முறை ஐரோப்பிய கோப்பை யை கைப்பற்றிய ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்று 5ஆவது அரையிறுதிக்கு முன்னேறி யது. போட்டி நடத்தும் 3 முறை சாம்பியனான ஜெர்மனி அணி சோகத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது.

தோல்வியுடன் விடைபெற்றார் ரொனால்டோ

சனியன்று அதிகாலை நடைபெற்ற 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. தொடக்கம் முதலே  இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. இரு அணிகளுக்கும் பல் வேறு கோல் வாய்ப்புகள் கிடைத்த நிலையில், வாய்ப்பு கள் அனைத்தும் வீணடிக்கப் பட்டதால் ஆட்டத்தின் 90 ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்காமல் இருந்தன. கூடுதல் நிமிடத்தி லும் பிரான்ஸ் - போர்ச்சுக்கல் அணிகள் கோலடிக்காமல் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதால், கூடுதல் நிமிடமும் கோலின்றி டிராவில் முடிவடைந்தது. இத னால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் பிரான்ஸ் வீரர்கள் கச்சிதமாக செயல்பட்ட நிலையில், ரொனால்டோவின் போர்ச் சுக்கல் அணி சொதப்ப லான ஆட்டத்தை வெளிப் படுத்தியது. இறுதியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4-ஆவது முறையாக காலிறுதிக்கு முன் னேறியது. 2016இல் சாம்பி யன் பட்டம் வென்ற போர்ச்சுக் கல் அணி 6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 

கால்பந்து உலகின் மிக முக்கிய நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல் அணியின் கேப் டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி ஐரோப்பிய கால்பந்து கோப்பை என்ற நிலையில், தோல்வியுடன் அவர் விடை பெற்றார்.

நியூயார்க்
கோபா அமெரிக்கா - 2024
அரையிறுதியில் கனடா

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 48ஆவது கோபா அமெரிக்கா தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று காலை நடை பெற்ற 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் வெனிசுலா - கனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கனடா அணி வீரர் ஜேக்கப் ஆட்டத் தின் 13ஆவது நிமிடத்திலேயே கோலடித்தார். தொடர்ந்து 64ஆவது நிமிடத்தில் வெனி சுலா வீரர் சாலமோன் கோலடிக்க ஆட்டம் பரபரப்பானது. அதன்பிறகு 90 மற்றும் கூடுதல் நிமிடத்தில் (120) இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், பெனால்டி சூட் அவுட் முறையில் வெனிசுலாவை 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்றைய காலிறுதி ஆட்டம்

உருகுவே - பிரேசில்

நேரம் : 
காலை 6:30 மணி
இடம் : 
லாஜ் வேஜஸ், அமெரிக்கா
சேனல் : 
பிபா ஆன்லைன்