games

img

ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம்

ஹாங்சோ, அக்.04- ஒலிம்பிக், டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து ஆசிய விளை யாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தி யுள்ளார்.  19-வது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. புதனன்று நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா தனது 4-ஆவது முயற்சியில் 88.88 மீ தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் 87.54 மீ தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், ஜப்பான் வீரர் ரோட்டரிக் ஜெங்கி 82.68 மீ ஈட்டியை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ராவின் தங்கப்பதக்கம் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.