games

img

மாற்றுத்திறனாளிக்கான உலக பாரா நீச்சல் போட்டி: இந்திய வீரர் சாதனை  

மாற்றுத்திறனாளிக்கான உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் புதிய சாதனை படைத்துள்ளார்.  

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் 4 நிமிடம் 39.71 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், 6ஆவது இடம் பிடித்தார்.  

முன்னதாக முகமது ஷம்ஸ் ஆலம் 4 நிமிடம் 43.39 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.