நைஜீரியாவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஒகாபர்.இவர் வெள்ளியன்று நடைபெற்ற 100 மீ ஓட்டப்பந்தய தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு சனியன்று அரையிறுதியில் பங்கேற்க தயாராக இருந்தார். திடீரென அவர் இருந்த பகுதியில் நுழைந்த அதிகாரிகள் ஊக்கமருந்து உட்கொண்டதை சுட்டிக்காட்டி ஒகாபரை சஸ்பெண்ட் செய்தனர். உடல் பலத்தை அதிகரிக்க ஒகாபர் கடந்த 19-ஆம் தேதி ஊக்கமருந்து உட்கொண்டுள்ளார் என மருத்துவ விசாரணையில் தெரியவந்துள்ளது.