50 மீ பிஸ்டல் (கலப்பு) துப்பாக்கிச் சூடுதல் பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நார்வல் 218.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சிங்ராஜ் 216.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்று டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் 2-வது பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார். ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சார்பாக களமிறங்கிய செர்ஜே கடும் போராட்டத்துக்கு இடையே 196.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
ஒரே நாளில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை பெற்றதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 17 ஆக (4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம்) உயர்ந்துள்ளது.