பதிலடி கொடுக்குமா தென் ஆப்பிரிக்கா?
இன்று 2ஆவது டி-20 போட்டி
4 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான முதல் டி-20 போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனின் (107 ரன்கள்) அதிரடி சதத்தின் உதவியாலும், தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி (3 விக்கெட்) - ரவி பிஷ்னோய் (3 விக்கெட்) ஜோடியின் அசத்தலான சுழற்பந்துவீச்சாலும் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2ஆவது டி-20 போட்டி ஜார்ஜ் பார்க்கில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், தொடரை கைப் பற்றும் பாதையில் பயணிக்கும் முனைப் பில் இந்திய அணியும் என இரு அணி களும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ஜார்ஜ் பார்க் மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18,
ஜியோ சினிமா (ஓடிடி)
புரோ கபடி 2024
மீண்டும் பார்ம் அவுட்டில் தமிழ் தலைவாஸ்
புரோ கபடி தொடரில் நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ் தலை வாஸ் அணி சச்சின் தன்வார் (ராஜஸ்தான் - குஜராத், தில்லி, பாட்னா அணிக ளுக்காக விளையாடியவர்) வருகையாலும், நரேந்தி ரரின் அனுபவ ஆட்டத்தா லும் 11ஆவது சீசனின் தொடக்க ஆட்டத்தில் மிக அருமையாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முத லிடத்திற்கு முன்னேறியது. எனினும் 4ஆவது லீக் ஆட்டம் முதல் சொதப்ப லான ஆட்டத்தை வெளிப் படுத்தி மீண்டும் பார்ம் அவுட் லிஸ்டில் இணைந்துள்ளது. இதுவரை 8 ஆட்டங்க ளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 4 தோல்வி, ஒரு டை என 21 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு இறங்கி யுள்ளது. கடந்த வாரம் முத லிடத்தில் இருந்த தமிழ் தலை வாஸ் அணி அடுத்த 5 நாட்க ளுக்குள் 6ஆவது இடத்தி ற்கு கீழே இறங்கியுள்ளது. பலமான வீரர்கள் இருந்தும், கடைசி நேர சொதப்பலால் தமிழ் தலைவாஸ் தொடர் தோல்வியை சந்தித்து வரு கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இரண்டு ஆட்டங்களும்: கச்சிபலி மைதானம், ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)