டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 847 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 322 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.