இந்தியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் இரண்டு போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கிட்டதட்ட தொடரை கைப்பற்றியது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்தித்தது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், மும்பையில் நவ. 1ஆம் தேதி தொடங்கும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நியூசிலாந்து அணியும், கடைசி டெஸ்டின் வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில், நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.