games

img

விளையாட்டு...

நொய்டா மைதானத்துக்கு தடை?
ஆப்கானிஸ்தானால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்

போதியளவு நிதி, பாதுகாப்பு மற்றும் மைதான வசதிகள் இல்லாத காரணத்தினால் ஆப்கானிஸ் தான் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை, இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நல்லெண்ண அடிப்படையில் உதவி செய்கிறது. இதன் ஒருபகுதியாக ஆப் கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷாகீத் விஜய் பாதிக் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.  இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் நொய்டா பகுதியில் சில நாட்கள் மழை பெய்ததால், மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்தது. டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்கள் மழை பெய்யாத சூழலில், மைதானம் இன்று வரை மோசமான நிலையிலேயே இருந்தது. இதனால் போட்டியை நடத்த முடியவில்லை. மைதான ஊழி யர்கள் கடுமையாக போராடியும் வடி கால் வசதி இல்லாததால் தேங்கி இருந்த  மழை நீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாளான புதனன்றும் மழைநீர் தேக்கம் காரணமாக போட்டி கைவிடப் பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி நடுவ ரான இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத், நொய்டா மைதானத் தின் பிட்ச் மற்றும் அவுட்பீல்டு பகுதி குறித்து அறிக்கை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்ப  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜவகல் ஸ்ரீநாத் தனது அறிக்கையில், பிட்ச் மற்றும் அவுட்பீல்டு பகுதிகள் சர்வதேச அளவிலான போட்டியை நடத்த தகுதியற்றவை என குறிப்பிட்டு இருந்தால் அந்த மைதானத்திற்கு 3 மதிப்பு இழப்பு புள்ளி வழங்கப்படும். ஒரு மைதானத்திற்கு 6 மதிப்பு இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டால் அந்த மைதானத்தில் அடுத்த 12 மாதங் களுக்கு சர்வதேச போட்டி நடத்த முடி யாது என்பதால் நொய்டா மைதானத் திற்கு  வரும் நாட்களில் கடுமையான அளவில் சிக்கல் உருவாகும் என  கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்துள் ளனர். ஆப்கானிஸ்தான் எப்படி பொறுப்பேற்கும்? ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி நடத்த, ஆப்கானிஸ் தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தபோது பிசிசிஐ பெங்களூரூ,  கான்பூர், நொய்டா என 3 மைதானங் களை சுட்டிக் காட்டி ஒன்றை தேர்வு  செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. இதில் நொய்டா மைதா னத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. மலிவான ஒப்பந்தத்திற்கு மைதானத் த்தைப் பெற நினைத்த ஆப்கானிஸ் தான்  அணி, தற்போது டெஸ்ட் போட்டி யை முழுமையாக நடத்தி முடிக்க முடி யாத இக்கட்டான நிலைக்கு சென்றுள் ளது. ஆப்கானிஸ்தான் நொய்டா மைதானத்தை தேர்வு செய்தாலும், மைதானத்தை பராமரிக்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐ மற்றும் உத்தரப்பிர தேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு முழு பொறுப்பு உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் பொறுப்பேற்க முடியாது. பிசிசிஐக்கு தான் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி
மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கில் புரட்டியெடுத்த இந்தியா

8ஆவது சீசன் ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி தொடர் செப்டம் பர் 8 அன்று சீனாவின் ஹுலுன்பியர் நக ரில் உள்ள மோக்கியில் தொடங்கி யது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6  அணிகள் பங்கேற் கும் இந்த தொடரின், 8ஆவது லீக் ஆட்டம் புதனன்று நடைபெற்றது.  இந்த ஆட்டத்தில் இந்தியா - மலேசியா அணிகள் மோதிய நிலை யில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ராஜ் குமார் பாலின் ஹாட்ரிக் கோலால் 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 புள்ளி களுடன் (3 ஆட்டம் - 3 வெற்றி) முதலிடத்திற்கு முன்னேறியது.