இந்தியா - ஆஸி., இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
5 போட்டிகளைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி 2 வாரத்திற்கு முன்பு நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று அடிலெய்டு மைதானத்தில் பகலி ரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரே லிய அணி தீவிர பயிற்சியுடன் கள மிறங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொட ரில் முன்னிலை பெறும் முனைப்பில் இந்திய அணியும் தீவிர பயிற்சியுடன் களம் காண உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணி களும் வெற்றியின் மீது மட்டும் குறியாக களமிறங்குவதால் இந்த பக லிரவு டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா பந்துவீச்சு மீது சந்தேகம் வலுப்பது ஏன்?
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தார். உடனே ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மற்றும் அந்நாட்டின் கிரிக்கெட் வல்லுநர்கள் பும்ரா பந்துவீச்சு மீது சந்தேகம் இருப்பதாக கூறி தோல்வியை மறைக்கும் வேலையிலும், பந்துவீச்சு சர்ச்சை மூலம் பும்ராவை பார்ம் பிரச்சனையில் சிக்க வைக்கவும் சதி திட்டம் தீட்டி வரு கின்றனர். ஆனால் உண்மையில் பும்ரா பந்துவீச்சு மீது சந்தேகம் ஏற்படுவது ஒரே ஒரு சம்பவத்தினால் மட்டும் தான். மிக குறுகிய தூரம் மட்டுமே ஓடி 140 கிமீ-க்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசுவதனால் பும்ரா பந்துவீச்சு மீது சந்தேகம் வலுக்கிறது. மற்றபடி அவரது பந்துவீச்சில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.